November 4, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு – அதிமுக தலைமையகத்தில் டாக்டர் கோசல்ராம் ராஜா தாக்கல்

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம் ராஜா, இன்று அதிமுக தலைமையகத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திராவிடம் டாக்டர் கோசல்ராம் ராஜா தனது விருப்ப மனுவை வழங்கினார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களின் அடிப்படை தேவைகளுக்குமான சேவைகளை முன்னெடுக்க விருப்பம் தெரிவித்த டாக்டர் கோசல்ராம் ராஜாவின் மனு தாக்கல் நிகழ்வு, கட்சி வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது.