இளைஞர் எழுச்சி அரசியலை மாற்றும் – எதிர்காலம் புதிய தலைமுறையின் கையில்!– பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கருத்து
2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள், இந்திய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையை உருவாக்கியுள்ளன இந்தத் தேர்தல் பல பழைய நம்பிக்கைகளையும் அரசியல் மரபுகளையும் முறியடித்ததோடு, புதிய மாற்றத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளதாக அவர் கூறினார்
பணம் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும்,
பொதுவாக தமிழகத்தில் பணம் இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும், பெருபான்மை சமூகத்தினர் மட்டுமே போட்டியிட முடியும், அனுபவமிக்க முதியவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்” போன்ற கருத்துக்கள் நீண்ட காலமாக நிலவி வந்தன. ஆனால், சமீபத்திய தேர்தல் முடிவுகள் இந்த எண்ணங்களை முற்றிலும் முறியடித்துள்ளது .
குறிப்பாக இளைஞர்கள், இந்த பழைய அரசியல் கோட்பாடுகளை மறுத்து, மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
மேலும், பீகாரில் வெற்றி மற்றும் கேரளாவில் வாக்கு சதவீதம் உயர்வு அம்மாநிலங்களில் இளைஞர்களுக்கு அரசியல் வாய்ப்பு வழங்கப்பட்டதன் மூலம் புதிய சக்தி உருவாகி, சில கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடும்போது, அது வெறும் வாக்காளர்களாக மட்டுமல்லாமல், தீர்மானங்களை உருவாக்கும் சக்தியாகவும் மாறுகின்றனர்.
இதன் விளைவாக, அரசியல் தரமும், பொறுப்புணர்வும் உயர்வடைகிறது.
இன்றைய தலைமுறையினர், பழைய சித்தாந்த விவாதங்களில் சிக்கிக் கொள்ளாமல், நடைமுறை தீர்வுகளை நோக்கி நகர்கிறார்கள். வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற உடனடி தேவைகள் குறித்து சிந்திக்கும் இளைஞர்கள், அரசியலின் திசையை மாற்றும் வல்லமை பெற்றுள்ளனர். இதனால், “அரசியல் என்பது சாக்கடை” என்ற பழைய எதிர்மறை மனப்பான்மை மெதுவாக மறைந்து வருகிறது
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது உணர வேண்டிய முக்கியமான பாடம் ..இளைஞர்களுக்கு வழி விடுவது தான். மூத்த அரசியல்வாதிகள் தங்கள் அனுபவத்தை வழிகாட்டுதலாக வழங்கி, இளம் தலைமுறைக்கு வாய்ப்பு அளித்தால், அது அரசியலில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.
புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள் மூலம் தமிழக அரசியல் ஒரு ஆரோக்கியமான திசையில் நகரும்.
உலகமே டிஜிட்டல் மையம் போர் பயம் உலகத்தில் இப்பொழுது வளர்ந்து வரும் பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வு மற்றும் அறிவியல் முன்னேற்றம் பிற நாடுகளுடைய அரசியல் மாற்றம் சவால்களுக்கு மத்தியில்
புதிய தலைமுறையினர் அரசியலில் பங்கெடுத்துக் கொண்டால்தான் ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் இதுவே உண்மையான மாற்றம் ஏற்படும். அது மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் இது ஒரு வலுவான அடித்தளமாக அமையும்”
இளைஞர்கள் அரசியலில் அதிகமாக ஈடுபடுவது, ஜனநாயகத்தின் வலிமையை அதிகரிக்கும் ஒரு நல்ல அறிகுறி என அவர் குறிப்பிட்டார். மேலும் “எதிர்காலம் யாருடையது?” என்ற கேள்விக்கு இன்றைய பதில் – “இளைஞர்களின் கையில் தான்!” என்பதாக இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றார்
.
.

