தூத்துக்குடி, அக். 20:
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இன்று (20.10.2026) முதல் நாளை (21.10.2026) வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை அறிக்கை வெளியிட்டது அதன் அடிப்படையில்’ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- ஆற்றங்கரைப் பகுதிகள்: மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மற்றும் கோரம்பள்ளம் ஆறு, அணைக்கட்டுப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிப்பதையோ அல்லது கரையோரப் பகுதிகளுக்குச் செல்வதையோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- தாழ்வான பகுதிகள்: மழைநீர் தேங்கக்கூடும் மாவட்டத்தின் இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
அவசர உதவி எண்கள்
மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் தொடர்பான உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 கைபேசி எண்: 7092300044

