November 2, 2026
#விளாத்திகுளம்

கொரோனா காலத்தில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கியது அதிமுக அரசு வேட்பாளர் சத்யா பெருமிதம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுமேற்குக வேட்பாளா் சத்யா விளாத்திகுளம் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட விளாத்திகுளம் ஒன்றியம் அரசன்குளம், பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, சந்திக்கும், குமாரபுரம், மீனாட்சிபுரம் கோட்டனத்தம், ஜமீன் செங்கல்படை உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் சத்யா பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது வாக்கு சேகரித்து பேசுகையில்.,கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டு காலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. 

மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் அம்மா உணவகங்கள் மூலம் தரமான உணவு அளித்தோம். கொரோனா காலத்தில், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நாளொன்றுக்கு ஏழு லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் நல்லாட்சி அமைய போகிறது. முன்னாள் முதல்வர் ஜெ., கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் 

பிரச்சாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமசந்திரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.