November 5, 2026
#செய்தி #தூத்துக்குடி

பாதுகாப்பு ஆய்வு செய்யாமல் தெப்பக்குளம் கரையில் 75 லட்சம் பூங்கா கட்டிய மாநகராட்சி – ஒரே மாதத்தில் இடிந்து சரிந்தது: பாஜக குற்றச்சாட்டு”

தூத்துக்குடியில் நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தை சுமந்து நிற்கும் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர், புதிய பூங்கா அமைப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தவறான பணித் திட்டமிடல் காரணமாக சேதமடைந்துள்ளது. பழமையான நீர்நிலையின் பாதுகாப்பு விதிகளை புறக்கணித்தே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.”

தூத்துக்குடி 2-கேட் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியில், மாநகராட்சியின் ₹75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட பூங்கா கட்டப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முடிந்து ஒரே மாதம் நிறைவடையும் முன்னரே மணல் சரிவு ஏற்பட்டு, பூங்கா பகுதியின் நடைபாதை சுமார் மூன்றடி பள்ளத்தில் சரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சரிவு சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் சம்பந்தப்பட்ட  இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசும்போது,

“இந்த பூங்கா அமைக்கும் முன்பு சாயில் டெஸ்ட் (Soil Test) எடுக்கப்பட்டதா?

பெரிய நீர்நிலைகள் அருகே எந்தக் கட்டுமானமும் முன்னெடுக்கும்போது சாயில் டெஸ்ட் கட்டாயம். ஆனால் தெப்பக்குள பக்கத்தில் இந்த தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பது சந்தேகம்,” என்று கேட்டார்.

அவர் மேலும் கூறுகையில்:

தற்பொழுது மாநகராட்சி மேயர் இது குறித்து விடுத்துள்ள அறிக்கை  “அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் வல்லுநரை கொண்டு ஆய்வு மேற்கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும்” தூத்துக்குடி மாநகராட்சி மே

யர் ஜெகன் இதை முன்கூட்டியே செய்திருக்கலாமே மேலும் நீர் சூழ்ந்த பகுதி என்பது அறிந்தும் எப்படி கட்டுமானம் செய்ய வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார். நூறு வருடத்திற்கு மேலான இந்த பழம்பெரும் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இந்த புதிய திட்டத்தால் பழுதடைந்து குறித்து மன வேதனை அடைகிறேன் என்றார்.

இந்த ஆய்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மாநில சமூக ஊடகச் செயலாளர் காளி ராஜா, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தம்பி பாண்டியன், ஊடகப் பிரிவு தலைவர் ஜெயக்குமார், வர்த்தக பிரிவு தலைவர் செந்தில், OBC பிரிவு பொதுச் செயலாளர் வன்னியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.