November 5, 2026
#செய்தி

தூத்துக்குடி- நெல்லை இடையே இயக்கிய பாசஞ்சர் ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட் 15 முதல் பாலக்காட்டில் இருந்து வரும் பாலருவி ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.என்ற மகிழ்ச்சி செய்தியை தொடர்ந்து மற்றொரு செய்தியாக
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பேசஞ்சர் ரயில் வரும் 19 ம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே ஒரு அதிர்ச்சி தரும் செய்தியை ரயில் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.

ரயில் எண்:16791/16792தூத்துக்குடி – திருநெல்வேலி

திருநெல்வேலியில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 9.20 மணிக்கு இந்த ரயில் தாழையூத்து, கங்கை கொண்டான், வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம், தட்டப்பாரை, மீளவிட்டான், தூத்துக்குடி மேலூர், வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேரும்.அதேபோல தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

.