விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்த முருகன்- அனந்தம்மாள் தம்பதியினரின் மகன் சோலைராஜ் (31).இவருக்கு சமீபத்தில் திருமணமாகி உள்ளது. ஆனால் சோலைராஜ் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து கொண்டு கரிமூட்டம் செய்யும் தொழில் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் மதியம் 3 மணியளவில் திடீரென மழை பெய்ததால் சோலைராஜ் மற்றும் அவரது தாய் அனந்தம்மாள் இருவரும் பிள்ளையார்நத்தம்-வேலிடுபட்டி சாலையில் உள்ள தங்களது கரிமூட்டம் உள்ள இடத்தில் மழை நீர் தேங்கி விடாமல் இருப்பதற்காக பாத்தி அமைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இடி மின்னல் சோலைராஜ் மீது தாக்கியது.இதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே தனது தாய் அனந்தம்மாள் கண் முன்பே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன்,இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பெருமாள்,விஏஓ சித்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோலைராஜ் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை நடத்திய வருகின்றனர்.

