November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து கோவில்பட்டியில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்.

கோவில்பட்டி:கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவியான பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வேண்டும்.
மத்திய சுகாதார பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை பாதுகாப்பு வளையம் அறிவிக்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கத்தினர் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் கோவில்பட்டி கிளை செயலாளர் மருத்துவர் சிவநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.