தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, அந்தப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தியாகி சாமுவேல் அவர்களின் நினைவுச் சின்னம் பராமரிப்பின்றி இருப்பதாக பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவுச் சின்னத்தையும் நேரில் பார்வையிட்டு அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்றுப் பெருமை வாய்ந்த அந்த நினைவுச் சின்னம் முறையாக பாதுகாக்கப்பட்டு, தேவையான பராமரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆய்வின்போது உடனிருந்தனர்.

