தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த காரியாலயத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி, திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகம் காட்டினர்.
இதனைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள போத்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பிரச்சாரப் பயணம் தொடங்கப்பட்டது. பின்னர் 11வது வார்டு, 12வது வார்டு, 13வது வார்டு, 20வது வார்டு மற்றும் 21வது வார்டு பகுதிகளில் வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர்.

