November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி–வாஞ்சி மணியாச்சி புதிய சாலை திட்டம்: கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2025–26-ன் கீழ்,

தூத்துக்குடி – வாஞ்சிமணியாச்சி சாலை

தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை அமைக்கப்படவுள்ள புதிய சாலை திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

இந்த திட்டத்தின் பகுதி–1 ஆக, புதியம்புத்தூரிலிருந்து வாஞ்சி மணியாச்சி வரை 15.4 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு, கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.