November 5, 2026
#விளாத்திகுளம்

குளத்தூர் அருகே 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பனைவிதை நடும் திருவிழா

விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் பஞ்சாயத்து பனையூர் கிராமத்தில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் குளத்தூர் ஊராட்சி சார்பில் 2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2025 பனைவிதைகள் நடவு செய்யும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு வேப்பலோடை அரசு மேல்நிலை பள்ளி பசுமைபடை ஆசிரியர் நாகராஜ், மகி அறக்கட்டளை பி.முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துளசி டிரஸ்ட் எஸ்.தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குளத்தூர் ஊராட்சி தலைவர் செ.மாலதி கலந்து கொண்டு பனை பனைமரங்களின் சிறப்புகள் பற்றியும், வருகிற புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கி 2025 பனை விதைகள் நடவுப்பணியை துவக்கி வைத்தார். இவ்விழாவில் திமுக மாவட்ட பிரதிநிதி செல்லப்பாண்டி, பனையூர் கிராமத்தை சேர்ந்த மரகதவேல், விக்னேஸ்வரி, இராமலெட்சுமி, பொன்மலர் செல்வி, சரஸ்வதி, சாந்திக்கனி, செந்தூர்கனி,

ஸ்டெல்லா, இளங்கம்மாள், இந்திரா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பனைவிதை நடவுப்பணியை மேற்கொண்டனர். நிறைவாக மக்கள் நலப்பணியாளர் இராஜேஸ்வரி நன்றி கூறினார்.