November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரத்தில் பகுதி சபா கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி, மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட பகுதி சபா கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெறுவது போல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சி பகுதியில் பகுதிசபா கூட்டம் நடைெபறுகிறது.

அதனடிப்படையில் 42வது வார்டுக்குட்பட்ட சண்முகபுரம் ரினோன் பார்க்கிளப்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். மண்டலத்தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் மேயர் ஜெகன் பொியசாமி தொடக்கவுரையாற்றி பொதுமக்களிடம் குறைகளை தொிவிக்குமாறு கோாிக்கை விடுத்ததையடுத்து பொதுமக்கள் வண்ணார் 1ம் தெரு பெருமாள் தெரு மேற்கு பகுதியில் முழுமையாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதை அமைத்து தரவேண்டும். அதே போல் வண்ணார் தெரு பகுதியில் கால்வாய்கள் கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி தரவேண்டும், வண்ணாா் தெரு முதல் ஜாா்ஜ் ரோடு வரை உள்ள கால்வாய் சாலைகளையும் கட்டமைத்து தரவேண்டும். தாமோதரநகர் பிரதான சாலையில் தொடங்கி திருச்செந்தூர்ரோடு பீங்கான் ஆபிஸ் சந்திப்பு வரை அந்த சாலை பகுதியில் 7 தெருக்களிலிருந்து பிரதான சாலைக்கு வரும் போது விபத்து ஏற்படாத வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கால்வாய்களை தூர்வார வேண்டும் என பல்வேறு கோாிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்; தமிழக முதலமைச்சர் ஊராட்சி பகுதிகளுக்கு கிராமசபை கூட்டம் நடப்பதை போல் மாநகராட்சி பகுதிகளிலும் இதுபோல் கூட்டங்கள் நடத்தி குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கப்பட வேண்டும். என்று உத்தரவிட்டத்திற்கிணங்க பகுதி சபா கூட்டம் மட்டுமின்றி ஓவ்வொரு புதன்கிழமையும் 4 மண்டலங்களிலும் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு மக்கள மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றுள்ளது. 37 41 42 ஆகிய வார்டுகள் அடங்கிய பகுதிதான் சண்முகபுரம் பகுதி மிகவும் பழமையான பகுதியாகும். சுமார் 60 70 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட பல கால்வாய்கள் உள்ளன. அதில் சில இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சிறு குறைகள் இருந்தாலும் அதை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் இருப்பதால் அதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். மழை காலத்திற்குபின் முழுமையாக அனைத்து பணிகளையும் செய்து கொடுப்போம் தினசாி குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் 24 மணி நேரமும் குடிதண்ணீர் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மற்றும் சாலைகளை பொறுத்தவரை குறுகலான பகுதியில் பேவா்பிளாக் சாலை அமைத்து தரப்படும். சுகாதாரத்தை பொறுத்தவரை டெங்கு உள்பட பல தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க எல்லோருடைய குடியிருப்புக்கும் சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நமக்கு தேவையற்ற கழிவு பொருட்களை கால்வாய்களில் போடாமல் தினசாி உங்கள் பகுதிகளுக்கு வரும் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பொருட்களை முறையாக கொடுத்து உதவி சுற்று சூழலை பாதுகாத்து கெள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம். என்று மேயர் ஜெகன் பொியசாமி பேசினாா்.

கூட்டத்தில் பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்ராஜ், ஜெபக்குமாா் ரவி, முன்னாள் கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சண்முகபுரம் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் உத்திரபாண்டி, தங்கமணி, சற்குணம், மாாியப்பன், மூக்காண்டி, தேவர்பிச்சை, ராஜசேகா், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், ஆணையர் உதவியாளர் துரைமணி, மேயாின் உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

.