விளாத்திகுளம் பேரூராட்சி 12 வது வார்டு துளசிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியினை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,துணைத் தலைவர் வேலுச்சாமி,செயல் அலுவலர் மகேஸ்வரன்,
விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மத்திய ராமசுப்பு, மேற்கு அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல்,இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்,பேரூர் கழக துணைச் செயலாளர் வேலுச்சாமி, வார்டு கவுன்சிலர்கள் செல்வகுமார், கலைச்செல்வி செண்பகராஜ்,வார்டு செயலாளர் ராஜதுரை ,கழக நிர்வாகிகள் ராஜகோபால்,காத்தம்மாள், தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.

