விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது 40 அடி உயர பேனருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
தியாகி இமானுவேல் சேகரன் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் சார்பில் 40 அடி உயர இமானுவேல் சேகரன் பேனர் வைத்து பால் அபிஷேகம் செய்யப்பட்டது.மேலும் ஏராளமான பெண்கள் மேளதாளங்கள் முழங்க பால்குடம் எடுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து ஊர் தலைவர் மாரியப்பன், செயலாளர் சந்திரமூர்த்தி, ஆட்டோ சங்கத் தலைவர் செண்பககனி உட்பட பலர் இமானுவேல் சேகரன் முழு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

