November 4, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வேட்புமனு தாக்கல்

தூத்துக்குடி, ஏப். 6:

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் கீதா ஜீவன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து அமைச்சர் கீதா ஜீவன் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலம் அழகர் ஜுவல்லர்ஸ், பெரிய பள்ளிவாசல், தந்தி ஆபீஸ், பழைய மாநகராட்சி அலுவலகம், சின்னக்கோவில் மெயின் வாயில் மற்றும் சென்ட்ரல் போலீஸ் நிலையம் வழியாக சென்றது.

பின்னர், மக்கள் கூட்டத்துடன் நடந்தே சென்ற அமைச்சர், பழைய துறைமுகம் அருகிலுள்ள சப் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் சுசி ரவீந்திரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மருத்துவ அணித் தலைவரஅருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும், காங்கிரஸ், சமத்துவ மக்கள் கழகம், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.