November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

எட்டயபுரத்தில் பாரதியார் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

எட்டயபுரம் மகாகவி பாரதியின் 103 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் அவரது 103 வது நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர்ராஜு எம்எல்ஏ ஆலோசனையின்படி, விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் அறிவுறுத்தலின்படி எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் மகாகவி பாரதியின் முழு உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அவைத் தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிரணியினர் செல்வி, சாந்தி, கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, ஜெயக்குமார், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.