தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஆய்வு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் துறைமுக ஆணைய தலைவர் சுகாந்த் குமார் புரோகித், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் மற்றும் துறைமுக ஆணைய அலுவலர்கள் பங்கேற்றனர், இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் வ.உ.சி துறைமுகம் நிறுமச் சமூக பொறுப்பு நிதியில் மாநகரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை துறைமுக ஆணைய தலைவர் சுகாந்த் குமார் புரோகித்திடம் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினர்.
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் துறைமுக நிர்வாகம் முக்கிய பங்காற்றும் என்று இக்கூட்டத்தில் கூறப்பட்டது.
இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்;
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கடற்கரை பூங்கா, போதை மீட்பு மறுவாழ்வு மையம் மற்றும் கடற்கரை சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திட்டங்களை வ.உ.சி துறைமுக சமூக பொறுப்பு நிதியிலிருந்து பெற்றுத்தந்த திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி’ மற்றும் துறைமுக ஆணையத்திற்கும் மேயர் நன்றி தெரிவித்தார்.

