தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டியில்
செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1988 – 1993 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் நம்ம ஊர் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது
தாங்கள் படித்த போது சாப்பிட்ட தின்பண்டங்களை காட்சிப்படுத்தி இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைத்தார்கள் முன்னாள் மாணவர்கள்
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை முன்னாள் மாணவர் ரவி வரவேற்றார். காளாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை உரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்துகொண்டு புதிய கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பாராட்டி கௌரவித்தனர். விழாவின் இறுதியில் முன்னாள் மாணவி கௌரி நன்றி உரை கூறினார்.

