விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வாக்கு சேகரித்தார்.தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஒன்றியம், வடக்கு பசுவந்தனை கைலாசபுரம், வெங்கடாசலபுரம், துரைசாமிபு ரம், கீழமுடிமண், மேல முடிமண், காப்பிகுளம்,நாகம்பட்டி உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்.,
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு வழங்கவில்லை என்றும் தமிழக மக்களின் உரிமையை தடை செய்யும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழக மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், மாணவ- மாணவியருக்கு உயர் கல்விபெற மாதம் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம், தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஏழை எளிய பொது மக்களும் மருத்துவம் கிடைத்திட மக்களை தேடி மருத்துவம் திட்டம் என ஒப்பற்ற திட்டங்களை
செயல்படுத்தி வருகிறார். தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் தமிழர்களின் உரிமையை பாது காப்பதற்கான தேர்தல். எனவே தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாத்திட மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைய வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

