November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம் அதிமுக வேட்பாளர் சத்யா வாக்குறுதி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளா் சத்யா நேற்று ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் சீகம்பட்டியில் அதிமுக வேட்பாளா் சத்யா தனது பிரசாரத்தை தொடங்கினாா்.காலை 8 மணிக்கு தொடங்கி குதிரைகுளம், ஜம்புலிங்கம்,சில்லாங்குளம், சுப்பிரமணியபுரம், பரமன்பச்சேரி, குப்பணாபுரம், மேலமுடிமண், துரைச்சாமிபுரம், கப்பிகுளம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது வாக்கு சேகரித்து பேசுகையில்.,  அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நடவடிக்கையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம். என உறுதியளித்தார்.மேலும், மகளிருக்கு மாதம் இரண்டாயிரம் உரிமைத்தொகை, ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டன; அதேபோல் மீண்டும் மக்கள் நல ஆட்சி கொண்டு வரப்படும் என கூறினார்.

இந்த பிரச்சாரத்தில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.