November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது – அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி காணாமல் போன நிலையில், பின்னர் காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகும். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார். 

அதேபோல் இந்த வழக்கை மிகுந்த முக்கியத்துவத்துடன் அரசு எடுத்துக்கொண்டுள்ளதாகவும், விசாரணைக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்க கொலை செய்யப்பட மாணவியின் பெற்றோர் இன்னும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அதேபோல் இது தேர்தல் வரும் சமயம் என்பதால் பிர கட்சியினர் இதை அரசியல் ஆக்க வேண்டாம் பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் புகார் அளிக்க வந்தபோது அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளார். மேலும் மிக விரைவில் குற்றவாளியை காவல் துறை கண்டுபிடிக்கும் என அவர் கூறினார்.