November 4, 2026
#தூத்துக்குடி

சர்வதேச மகளிர் தினம்: மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்–ஊழியர்கள் இடையே விளையாட்டு போட்டி

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திருமதி பிரியங்கா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.