By ஜெயக்குமார்
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட சமூக ஊடகப்பிரிவு மற்றும் ஊடக பிரிவு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட சமூகஊடகப்பிரிவு தலைவராக முத்து பெரிய நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், சமூக ஊடகத் துறையில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகப்பணிகளில் ஆர்வமும் முயற்சியும் கொண்டவராக அறியப்படும் அவர், கட்சியின் கருத்துகளை பொதுமக்களிடம் திறம்பட கொண்டு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலையில் புதிய நிர்வாகிகள் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருவது அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளதாகவும், இதன் மூலம் மாவட்டங்களில் பாஜகவின் ஊடக செயல்பாடுகள் மேலும் தீவிரமடையும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

