November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 20ல் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பகுதி சபா கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 20ல், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வட்டச் செயலாளர் ரவீந்திரன், பகுதி சபா உறுப்பினர் ஐசக், திமுக பிரதிநிதி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அந்தப் பகுதி பொதுமக்களின் குடிநீர் வசதி, சாலை சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, தூய்மை பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், வளர்ச்சி பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.