தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள ராஜா பிள்ளை தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மழைக்காலங்களில் சேறும், குழிகளும் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாலை அமைக்கப்படாததை கண்டித்து, பாஜக முன்னாள் மாவட்ட பொருளாளரும், வழக்கறிஞருமான எஸ். சண்முகசுந்தரம் (9–1–2026) மாலை 5 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ராஜா பிள்ளை தெருவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகே மேயரின் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இது பாஜக முன்னெடுத்த நடவடிக்கைக்கு எதிரொலியாகவே அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சாலை விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

