November 4, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

2026 ஆங்கில புத்தாண்டு தர்மம், தேசபக்தி வலிமையுடன் புதிய ஆண்டு தூத்துக்குடி பாஜக வாழ்த்து

தூத்துக்குடி, ஜனவரி 1 :
2026 ஆம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பில் அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதன தர்மத்தின் ஒளியுடன்,
தேசத்தை கட்டியெழுப்பும் இந்துத்துவா சிந்தனையின் வலிமையுடன்,
இந்த புதிய ஆண்டு பாரத தேசத்திற்கு பெருமை, பாதுகாப்பு, முன்னேற்றம் கொண்டு வரட்டும்”
என்றும்

வேதங்கள் போதித்த தர்மம்,
உபநிஷதங்கள் கூறிய ஞானம்,
பகவத் கீதை எடுத்துரைத்த கடமை உணர்வு
இவை அனைத்தும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக 2026 ஆம் ஆண்டில் ஒளிர வேண்டும் எனவும் இந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் பிரிவினைகளை விலக்கி,
பண்பாட்டை பாதுகாத்து,
பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி,
இந்தியாவின் அடையாளமான ஆன்மிக ஒற்றுமை உலகிற்கு வழிகாட்டியாக மாற வேண்டும் என்றும்

கோயில்களின் மணி ஓசை,
வேத மந்திரங்களின் ஒலி,
தியாகிகளின் நினைவு,
வீரர்களின் இரத்தம் —
இவை அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவை ஒரு வலிமையான, சுயமரியாதை கொண்ட, நாடக உலகத் தலைவர் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்த ஆண்டில் உருவாக வேண்டும்

2026 ஆம் ஆண்டு ஒவ்வொரு இல்லத்திலும் ஆரோக்கியம், செழிப்பு, அமைதி நிலவவும்,
ஒவ்வொரு இதயத்திலும் தேசபக்தி, தர்ம உணர்வு, தன்னம்பிக்கை நிறைந்திருக்கவும் தூத்துக்குடி
பாரதிய ஜனதா கட்சி, சார்பில் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.