தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் சரிபார்க்கும் முகாம் நடைபெற்றது இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத்தில் உள்ள 293 பூத்துக்களுக்கும் சரி பார்க்கும் பணியினை செய்திருந்தார்கள்.
பாஜக வின் தெற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் 
10 பூத்துளுக்கு ஒரு குழு அமைத்து வாக்காளர் சரிபார்க்கும் பணியினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளை கொண்டு செய்திருந்தார்.
இந்த குழுவில் பாஜகவை சார்ந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் பி எல் ஏ ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்கள்.

