தூத்துக்குடி ஆக 21:பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 122 -வது பிறந்தநாள் மற்றும் பசுமை புரட்சி காமராஜர் இயக்கத்தின் 3ம் ஆண்டு விழா, முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் S ஜஸ்டின் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு விழா,ஆகிய முப்பெரும் இன்று காலை 10 மணி அளவில் விழா துவங்கியது
இவ்விழாவில் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எ.பி.சி.வி சண்முகம் மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்து
“44-வது வார்டுக்கு,”
நலத்திட்ட உதவி வழங்கி விழாவினை துவக்கி வாழ்த்துரை வழங்கினார் .
அதேபோல் முன்னாள் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தூத்துக்குடி தலைவர் ரா.எலிசபெத் ராஜன் வரவேற்புரையாற்றறி நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கினார் .
மேலும் இந்த விழாவை சிறப்பாக நடத்திய தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிறுவனர் பசுமை புரட்சி காமராஜர் இயக்கம் எஸ்.பி.ராஜன் மற்றும் சி. எஸ். முரளிதரன் மாநகர மாவட்ட தலைவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


