தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ.5-கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
அடிக்கல் நாட்டு விழாவிற்கு, விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் சுரேஷ்குமார், மருத்துவர் முத்துவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, புதூர் நகர செயலாளர் மருது பண்டியன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

