November 5, 2026
#தூத்துக்குடி

முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்கள், அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசு வென்ற வீரர் வீராங்கனைகள் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இதில் குண்டு எறிதல் போட்டியில் முத்துமீனா முதலிடமும், இறகு பந்து போட்டியில் ரெஜினா பியூலா, ரேணுகா பிரியா ஆகியோர் இரட்டையர்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில் கற்குவேல் மகேந்திரன் இரண்டாம் இடத்தையும், ஈஸ்வரி மூன்றாம் இடமும் வென்றனர். மேலும் மாநில அளவில் கால்பந்து போட்டியில் தூத்துக்குடி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் பங்கேற்ற கற்குவேல் மகேந்திரன், முகமது நசீர், சேசு ரதராஜ் , லிங்கராஜ், ஜெபின், கவின், கார்த்திக் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து அமைச்சர் கீதாஜீவனை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வெற்றி பெற்ற சான்றுகள் பக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பயிற்சியாளரும் சங்க செயளாலருமான ஸ்டீபன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்க தலைவர் டாக்டர் முஹம்மது நசீர், துணைத் தலைவர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆகியோர் உடனிருந்தனர்

.