November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு உறுதிமொழி: ஆணையர் தலைமையில் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர்

தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, இந்தியாவின் இறையாண்மை, சமநலம், சமயச் சார்பின்மை மற்றும் மக்களாட்சியைக் காக்கும் நோக்கில் உறுதிமொழி நிகழ்வு தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்திய குடியரசின் அடிப்படைச் சிந்தனைகளை பாதுகாப்பதற்கான இந்த உறுதிமொழியை, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, , அவர்கள் முன்னிலையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒருமித்த மனதுடன் எடுத்துக்கொண்டனர்.

நாட்டின் ஒற்றுமையும் ஜனநாயக அடிப்படைகளையும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அதிகாரிகள் மத்தியில் தேசப்பற்று மற்றும் பொறுப்புணர்வை மேலும் உயர்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.