November 5, 2026
#தூத்துக்குடி

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு – ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தொடக்கம்

தூத்துக்குடி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் மற்றும் விலையில்லா வேஷ்டி–சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆலந்தூர் பட்டுரோடு நியாயவிலைக் கடையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி டூவிபுரம் நியாயவிலைக் கடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், சண்முகபுரம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்,

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி–சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு, மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை முழுமையாக வழங்காமல் இருந்து வருகிறது. இருப்பினும், நிதி நெருக்கடியான சூழலிலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதுபோன்ற பல மக்கள் நல திட்டங்கள் மூலம் தமிழகத்தின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அனைவரும் முதலமைச்சருக்கு ஆதரவாக தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்,” என தெரிவித்தார்

.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் திருமணிஸ்டாலின், மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, கூட்டுறவு பதிவாளர் அந்தோணிபட்டுராஜ், இணைப் பதிவாளர் காந்திநாதன், துணைப் பதிவாளர் கலையரசி, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, பேபி ஏஞ்சலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டச் செயலாளர் பொன்ராஜ், வட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், சண்முகராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பொருளாளர் சிவக்குமார், தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், 18ம்படி கருப்பசாமி கோவில் தலைவர் லிங்கசெல்வன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து உதவியாளர் ஜெயபிரகாஷ், அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.