விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் ட்ரோன் மூலம் இலவசமாக விதைகள் விதைத்து வழங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்முறையாக மானவாரி விவசாய நிலத்தில் கோடாங்கிபட்டி கிராமத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக சுமிந்தர் இந்தியா ஆர்கானிக் நிறுவனத்தின் மூலம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ட்ரோன் மூலம் இலவசமாக மிளகாய் விதைகள் விதைக்கப்பட்டு இயற்கை உரங்களும் வழங்கப்பட்டது.இந்த தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத்திற்கு தேவையான ஆட்கள் பற்றாக்குறை குறைப்பதையும்,விவசாயத்திற்கு அதிக நேரம் செலவாவது தவிர்ப்பதற்கும்,குறைந்த செலவில் அதிகமான விளைச்சல் தரும் விதமாக சோதனையோட்டமாக முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது. மேலும் விவசாய விளைபொருட்களை மார்க்கெட் விலையை விட கூடுதலான விலைக்கு நேரடியாக விவசாய இடத்திற்கு சென்று நிறுவன பெற்றுக் கொள்ளும்.
இந்நிகழ்வில் புதூர் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் சிவகுமார், ராமசுப்பையா, கதிரவன், வாசுதேவன், சரத்குமார், சுமிந்தர் இந்தியா ஆர்கானிக்ஸ் திட்ட மேலாளர் டேவிட், கள ஆய்வாளர் கண்ணன், செல்வகுமார், பொறியாளர்கள் அருண், சஞ்சய் உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்.

