November 5, 2026
#விளாத்திகுளம்

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாமை அமைச்சர் கீதாஜீவன்,எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது.

இம்முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி
மார்க்கண்டேயன் துவக்கி வைத்து
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

மேலம்தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் (வே.பொ.)
பா. கிளாட்வின் இஸ்ரேல் அவர்கள் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு விவசாயிகள் இத்தகைய இலவச சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்புக்கள் சிறப்புத் தள்ளுபடியில் தனியார் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில் வேளாண்மை பொறியியல் துறையினைச் சேர்ந்த உதவி செயற் பொறியாளர்கள் சங்கரநாராயணன், முருகன், செவ்வேள் மற்றும் உதவிப் பொறியாளர்கள், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்), வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத்துறையைச் சார்ந்த அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.