தூத்துக்குடி.உழைப்பாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நலத்திட்ட உதவிகளை 2000 விசைப்படகு தொழிலாளர்களுக்கு திமுக சார்பில் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
-
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;
தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு சங்க தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீனவர்களுக்கான மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயர்த்தி வழங்கியது, மீனவர்களுக்கான தனி மீனவர் வங்கி தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளோம்.
உழைக்கும் தொழிலாளர்களின் பலம் என்பது நம்முடைய ஒற்றுமையே என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் சங்கங்கள் பல இருந்தாலும் பிரிவினைகள் இருந்தாலும் நாம் அனைவரும் உழைக்கும் வர்க்கம் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த உழைப்பாளர் தினத்தன்று, தொழிலாளர் தோழர்களுக்கு என்னுடைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். தற்போதைய 60 நாள் மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகள் பழுது பார்த்தல், பராமரிப்பு தவிர வேறு தொழில்கள் நடைபெறாத சூழலில். தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அவர்களுக்கு இந்த மீன்பிடி தடைக்கால நிவாரண நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற மகத்தான கனவோடு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். திராவிட மாடல் முதலமைச்சரின் திட்டங்களால் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக முன்னேறி வருகிறது.
உழைப்பு என்பது மிக முக்கியமானது நம் அனைவருமே உழைப்போம் நம்ம வீட்டை மட்டும் அல்லாமல் தமிழ் நாட்டுக்காகவும் நாம் உழைத்திடுவோம் என்று கூறிக்கொண்டு, அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், அவைத் தலைவர் செல்வராஜ், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ்,
பகுதிச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், சுரேஷ்குமார் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின்,
மற்றும் பேராசிரியர் பாத்திமா பாபு, அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், பவானி மார்சல், பேபி ஏஞ்சலின், விஜயகுமார், வைதேகி, சரவணகுமார், வட்டச் செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுப்பையா, சுரேஷ், தொழிலாளர் மேம்பாட்டு அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜேசையா, தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் அனைத்து விசைப்படகு தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் பிரகாசம், பொருளாளர் எடின்பர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

