திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் 14.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது, இதில் 4613 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு ரூபாய் 27.5 கோடி சமரச தொகைக்கு தீர்வு காணப்பட்டது இந்த வழக்கை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி.சாய்சரவணன் அவர்கள், திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராபின்சன் ஜார்ஜ் அவர்கள்,
திருநெல்வேலி மாவட்ட சட்ட பணிகள் ஆனைக்குழு செயலாளர் இசக்கியப்பன் மற்றும் ஏனைய நீதிபதிகள் கலந்து கொண்டார்கள்,
சாலை விபத்தின் போது பாதிப்புக்குள்ளான தனது இரண்டு கால்களையும் இழந்த அன்னல் ஜேசுராஜன் என்பவருக்கு ரூ 40 லட்சத்திற்கான ஓரியண்டல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் காசோலையை நீதிபதிகள் வழங்கினார்கள். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர்கள். A.செல்வராஜ், எஸ்எஸ்கேஎ.செல்வதங்கம் ஆஜரானார்கள்.

