விளாத்திகுளம் அருகில் அமைந்துள்ளது காடல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில். 142 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளியை சுற்றி உள்ள வளர்ந்த களைகள், மற்றும் செடிகள் நீக்கப்பட்டு பள்ளியை சுற்றிலும் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்து
“மாணவருக்கு ஒரு மரக்கன்று” நட்டு பராமரிக்க வேண்டும் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விளாத்திகுளம் வனத்துறையிமிருந்து வேம்பு, சவுக்கு உள்ளிட்ட பயன் தரும் மரக்கன்றுகள் பெறப்பட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக 9ஆம் வகுப்பு மாணவர்கள் 30 நபர்கள்
பள்ளியின் தலைமையாசிரியை நாடாளுமன்றசெல்வி தலைமையில் பள்ளியைச் சுற்றி தாங்களாகவே மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் செண்பகராமன், சங்கரமூர்த்தி,செண்பகராஜ், அந்தோணிசாமி,மாரிமுத்து, வனிதாமுத்துக்குமாரி, நிகல்சபனம்பானு உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

