November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தாலுகாவில் 5 கிராம நிர்வாக அலுவலகமே இல்லை சமூக ஆர்வலர் தகவல்.

தூத்துக்குடி : சமூக ஆர்வலர் ச. பாலா என்ற பாலசந்தர் தனது முகநூல் பக்கத்தில் வெளிட்டுள கோரிக்கை யாதெனில்

தமிழக அரசினுடைய அனைத்து சேவைகளையும் பொது மக்களிடையே நேரடியாக எடுத்துச் செல்லக்கூடிய அனைத்து பணிகளையும் கிராம நிர்வாக அலுவலர்கள் கடைக்கோடி வரை கொண்டு சென்று பேரிடர் காலங்களிலும் அவர்களது பணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

ஆனால் அவர்களின் அலுவலகங்களின் நிலைமையை பார்த்தால் பொதுமக்களே அவர்களுக்காக கோரிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்று விட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மிக அருகாமையில் உள்ள கிராமம் அய்யநடைப்பு கிராமம் அந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் மின்சாரம் கிடையாது,

தூத்துக்குடி பகுதி – 1
மீளவட்டான் பகுதி – 2
சங்கரப்பேரி இந்த மூன்று கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 50 % சதவீதத்துக்கும் மேல் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இந்த மூன்று கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் தற்போது சொந்த கட்டிடம் கிடையாது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் எத்தனையோ அலுவலகங்கள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. அதில் கிராம நிர்வாக அலுவலகம் ஒரு சின்ன அறை கொடுத்தாலே போதுமானதாக இருக்கும். இதேபோன்று மிகப்பெரிய ஊராட்சியாக செயல்படும் மாப்பிளை ஒரு கிராமம் மற்றும் மறவன்மடம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் என்பது சொந்த கட்டிடம் கிடையாது. மக்களுக்காக பணியாற்றுகின்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலகம் அரசு கட்டிடத்தில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர் என்ற முறையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.