November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

கீழ ஈரால் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் – கீழ ஈரால் ஊராட்சியில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் நவநீதக்கண்ணன், ராமசுப்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் . தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.