November 5, 2026
#தூத்துக்குடி

7 வது முறையாக திமுக ஆட்சி! மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவர்! செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் சபதம்

தூத்துக்குடி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 3ம் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தும் வகையில்,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகம் கலைஞர் அரங்கில் அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில், மார்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. 

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் – மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்று கூறியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தங்களது மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்து முழுமையாக அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

அதே போல் இளைஞர் அணி, மாணவர் அணிகளுக்கு புதிய உறுப்பினா்களையும் சேர்க்க வேண்டும். இன்னும் 10 மாதத்தில் தோ்தலை சந்திக்க தயாராக உள்ளோம். எல்லா பகுதிகளிலும் அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை, தின்னை பிரச்சாரங்கள் முழுமையாக மேற்கொண்டு வடக்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் முழுமையான வெற்றியை 2026ல் பெறுவது மட்டுமின்றி எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு இப்போது அனைவரும் சபதம் ஏற்று பணியாற்றுங்கள் 7வது முறையாக திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். 

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பதவியில் அமா்ந்து எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றுங்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நான்கு தீர்மானங்கள்:

  1. மாநில உாிமைகளுக்கு குரல் கொடுத்து தீரத்துடன் சமூகநீதியை பாதுகாத்து சட்டமன்ற மாண்பினை நிலைநாட்டி ஜனநாயக கோட்பாடுகளை உயா்த்தி பிடிக்கும் அரசாகவும், ஓன்றிய பாஜக அரசின் ஏதேச்சாதிகார போக்கிலிருந்து அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியலை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தொிவித்தும்.
  2. 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலைமைச்சருக்கு பாராட்டு தொிவித்தும்,
  3. பாஜக அரசிடம் ஜாதி வாாி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஓன்றிய அரசின் ஒப்புதல் அளிக்கச் செய்தது.
  4. அரசியில் சட்ட வரலாற்றில் புதிய அத்தியாயமாக ஆளுநாின் கையெழுத்தின்றி உச்ச நீதிமன்றமே ஓப்புதல் அளித்து சட்டம் இயற்றும் அதிகாரத்தை தனது சட்ட போராட்டம் மூலம் பெற்று ஆளுநர் மறுத்த 10 மசோதாக்களை சட்டமாக்கி சாகப்தம் படைத்து சட்டம் இயற்றும் அதிகாாரம் சட்டமன்றத்திற்கே ஆளுநருக்கு இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்ச நீதி மன்ற தீர்ப்பை பெற்று தமிழ்நாட்டின் உாிமையையும் அனைத்து மாநிலங்களுக்குமான உாிமைகளை பெற்றுத்தந்தது.

உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

முன்னதாக பகல்ஹாமில் தாக்குதலில் உயிாிழந்தவா்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ், மற்றும் திமுக முன்னோடி மறைவிற்கு இரங்கல் தொிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பெருமாள், கணேசன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், ஓன்றிய செயலாளர்கள் சின்னப் பாண்டியன், மூம்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, முருகேசன், கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கருணாநிதி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், நிர்மல் ராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமிநாதன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, சீனிவாசன், பொன்சீலன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, துணை அமைப்பாளர் ரவி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஐயாத்துரை பாண்டியன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் ,மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.