| தூத்துக்குடியில் 3000 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம்! முன்பு வளர்ச்சிப் புள்ளியாக இருந்த தூத்துக்குடி, தற்போது இன்ஸ்பிரேஷன் ஹப்பாக மாறி வருகிறது. |
தூத்துக்குடி: பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும். அடுத்தகட்டமாக அதிரடியாக, தூத்துக்குடிக்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ரூபாய் 450 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும் தூத்துக்குடி புதிய விமான முனையம், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் வளர்ச்சிப் புள்ளியாக திகழ்ந்த தூத்துக்குடி, தற்போது இன்ஸ்பிரேஷன் ஹப்பாக மாறி வருகிறது. கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த தூத்துக்குடி விரிவாக்கப்பட்ட விமான நிலையம், அதனைத்தொடர்ந்து இன்னொரு பெரும் வளர்ச்சித் திட்டமாக, மத்திய அரசு 3,000 ஏக்கரில் கப்பல் கட்டுமானத் தொகுப்பை தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ளது.
இந்த மெகா திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் 15,000 ஏக்கர் பரப்பளவில், ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டும் மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. இதில் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
பசுமை ஹைட்ரஜன் – தூத்துக்குடிக்கு உலக அங்கீகாரம்
இந்த வளர்ச்சியின் ஒரு முக்கியமான கூறாக, பசுமை எரிபொருள் தொழில்துறையும் மையமாக உருவாக்கப்படும். தற்போது 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள், ஆண்டுக்கு 40 லட்சம் டன் திறனுடன், தூத்துக்குடியில் செயல்பட ஒப்புதல் பெற்றுள்ளன. இதற்காக மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடு திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டம், உலக பொருளாதார மன்றத்தால் “Green Hydrogen Hub” என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியாவை போக்குவரத்துக்கேற்ப பைப்லைன் வழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரிகள் தெரிவித்த போது “தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டுமான மையமாகவும், பசுமை எரிபொருள் உற்பத்தியில் முன்னணி மையமாகவும் மத்திய அரசு உருவாக்குகிறது. இது மாவட்டத்தின் வளர்ச்சிக்கே புதிய அடையாளமாக அமையும்.

