November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை வீட்டுமனை பட்டா வழங்க பல்வேறு முயற்சிகளை சில பத்திரிக்கையாளர் சங்கங்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.

 இருப்பினும் தற்போது அதிக அளவு முனைப்போடு ஈடுபட்டு வரும்..
தூத்துக்குடி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகளின் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலான
நிர்வாகிகள் பங்கெடுப்பு, பாராட்டுக்குரியது என தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்து கொள்கின்றனர். இதில் தனிச்சிறப்பு  என்னவென்றால் எந்த ஒரு பாரபட்சமற்ற முறையில் தகுதியானவர் இந்த சலுகை கிடைக்க வேண்டும் என்று,

புதிய நிர்வாகிகளான தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில்  செயலாளர் மோகன் ராஜ் , பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சிதம்பரம், இணை செயலாளர் சதீஷ். சங்க கௌரவ ஆலோசகர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து , செயற்குழு உறுப்பினர் முத்துராமன்

உள்ளிட்ட நிர்வாக குழுவைச்சேர்ந்தவர்கள்
அமைச்சர் சாமிநாதனை நேரில் சந்தித்து, தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் தூத்துக்குடி விமான நிலையத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில்;  பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு , அந்தந்த மாவட்டங்களில்
வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில்.
தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

ஆகையால் தாங்கள் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து வீட்டுமனை பட்டா உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்தனர்.

இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் சாமிநாதன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

எற்கனவே சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் சந்தித்துள்ள நிலையில் .

தொடர்ந்து 27.09.24 செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து, இந்த கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற
தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் எடுத்து வரும் தொடர் செயல் பாட்டு களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.