November 5, 2026
#செய்தி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்; மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அண்மையில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களின் புதுதில்லியிலுள்ள இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் அவர்கள் , மற்றும், நாடாளுமன்ற உறுபினர்கள், .கனிமொழி கருணாநிதி, டி.ஆர் பாலு ,திருச்சி சிவா ஆகியோர் நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சீதாராம் யெச்சூரி அவர்களின் மனைவி திருமதி சீமா சிஸ்டி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார்.