November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

சிவந்தி ஆதித்தன் 88வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் , மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

தினத்தந்தி நாளிதழ் அதிபர் சிவந்தி ஆதித்தனார் 88வது பிறந்தநாளையொட்டி வ.உ. சி மார்க்கெட் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, பொதுக்குழு உறுப்பினர்கள்
கோட்டு ராஜா, கஸ்தூரி தங்கம்,
மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார்,சக்திவேல்,நாராயணன்,
மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயகனி ,மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா,
பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், கவுன்சிலர்கள் கதிரேசன், சரவணகுமார், ஜெயசீலி, நாகேஸ்வரி, விஜயகுமார் ,பேபி ஏஞ்சலின், தெய்வேந்திரன்,, மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் நாராயண வடிவு, வட்டச் செயலாளர் பொன்ராஜ் ,செல்வராஜ், சுரேஷ்,
சதீஷ்குமார், வட்ட பிரதிநிதிகள் பால்துரை, பாஸ்கர், தொழிற்சங்க முன்னாள் செயலாளர் மரியதாஸ்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சேசையா, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், போல் பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் கருணா, மணி ,அல்பர்ட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.