சர்வதேச திமிங்கலம் சுறா மீன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கு
இந்திய அரசு புவி அறிவியல் அமைச்சகம் நிதி உதவியுடன் , தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விலங்கியல் துறை ஒருங்கிணைந்து சர்வதேச திமிங்கல சுறா மீன் பாதுகாப்பு தின விழிப்புணர்வு தேசிய கருத்தரங்கம் தருவைகுளத்தில் நடை பெற்றது.
கடல் வாழ் உயிரின பாதுகாப்பு மீது சமீபத்திய நடைமுறைகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கிற்கு கல்லூரி செயலர் சோம சுந்தரம் தலைமை வகித்து கருத்தரங்கை துவங்கி வைத்தாா்.
இதில் திமிங்கலம் சுறா மீன் இனம் பாதுகாத்தல் குறித்த அமர்வுகள் , மனித சங்கிலி,கடல் வாழ் உயிரின பாதுகாப்பு பேரணி, பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள், கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. திமிங்கல சுறா அதன் துடுப்பு, ஈரல் போன்ற வணிக பயன்பாடுகளுக்காக வேட்டையாடுதல் குறித்து எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.கருத்தரங்கில்
உத்திரபிரதேசம்,நொய்டா,கடல் பாதுகாப்பு மைய திட்ட மேலாளர் சுப்புராமன்,கேஜிஎஸ் கல்லூரி விலங்கியல் பேராசிரியர் சரவணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள்.
இந்த கருத்தரங்கில் விலங்கியல் துறை பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பானுமதி தலைமையில் விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் செய்திருந்தனர்.

