November 5, 2026
#தூத்துக்குடி மாவட்டம் #விளாத்திகுளம்

குளத்தூர் இந்து நாடார் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழாவில் மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜ் மாணவர்களுக்கு அறிவுரை.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் இந்து நாடார் நடுநிலைபள்ளியில்
பாரத திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்து நாடார் நடுநிலை பள்ளி சார்பாக குளத்தூர் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்துராஜ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனை ஏற்றுஉதவி ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.அதன்பின்னர்.

பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரதின சிறப்புரையில்:
ஒவ்வொருவரும் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் .எனவும் ஒழுக்கம் கடைபிடிக்கும் போது அனைத்து நல்ல குணங்கள் நமக்கு தாமாகவே வந்து சேரும் என கூறினார். அதேபோல் நமக்கு கற்றுக்கொடுக்கும் ஆசியர்களுக்கு
நாம் செய்யவேண்டிய கைமாறு என்னவென்றால் வருங்காலத்தில் நாம் நல்ல குடிமகனாக இருப்பதுதான். அதுமட்டுமின்றி பல்வேறு துறைகளில் மிக பெரிய அதிகாரியாக வருவது,
அதாவது பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் கலெக்டர் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு படிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி சிறந்த விளையாட்டு வீரர்ராகவும் சிறந்த விஞ்ஞானியாகவும் , ராணுவ அதிகாரியாகவும் வந்து இந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்பதை இந்த பொன்னான 78-வது சுதந்திர தின விழாவில் வேண்டுகோள் விடுப்பதாக எடுத்துரைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமரன் தலைமையாசிரியர் (பொறுப்பு)அவர்கள் வரவேற்புரை கூறினார்.ஆர்.பி.முருகேசன்  விஜய் மாரியப்பன் அவர்கள் தலைமை வகித்தார்.டி.எம் சந்திர சேகரன் மற்றும் என்.சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார்கள்

சிறப்பு விருந்தினராக:குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி துணை தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன்

வார்டு உறுப்பினர் முத்துசெல்வி ச.சாந்தி மற்றும் பள்ளியின் நிர்வாகத்தினர் கு.கெங்குராஜா, கு.ஜெயகிருஷ்ணன் எம்.கருணாகரன் கலந்து கொண்டனர் சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்வின் முடிவில் நன்றியுரை ஆசிரியர் த.தங்கமாரியப்பன் கூறினார். இந்த சுதந்திர தின விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி பரிமாறிக் கொண்டனர்.