தூத்துக்குடி குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் தரைமட்ட நீர் தேக்க தொட்டி மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு பனையூர் கிராமத்தில் 15- வது நிதிகுழுமானிய திட்டத்தின் கீழ் தரைமட்ட நீர் தேக்க தொட்டி GLR 8,63818 லட்சம் மதிப்பீட்டில், 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் நிலை தொட்டி கட்டப்பட்டு வருகிறது இந்ததரைமட்ட தொட்டி
சீவலப்பேரிகூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை சேகரித்து மின்மோட்டார் மூலம் நீர் ஏற்றம் செய்து மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய படும் மேலும் குளத்தூர்
டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் தெருவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி 3,57700 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது என ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி தெரிவித்தார்.
