November 2, 2026
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் இனி இரவு 9 மணி வரை ஆதார் சேவை!

தூத்துக்குடி: தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஆதார் சேவைகள் வழங்கப்படும்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி எதிரே அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் இதுவரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை மையம் செயல்பட்டு வந்தது. தற்போது பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, இரவு 9 மணி வரை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களது வசதிக்கேற்ப ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.