தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தூத்துக்குடியில் நாளை இரவு 7 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கரப்பேரி விலக்கு பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட ஏற்பாடுகளை திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களுமான Geetha Jeevan, Anitha R. Radhakrishnan உள்ளிட்டோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.

